கோலாலம்பூர், பிப் 23 – மலேசிய மருத்துவ சங்கத்துடன் பதிந்து கொண்ட மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய மருத்துவ சாதனங்களையும், மருந்துகளையும் உடல் அழகு சிகிச்சைக்காக , நான்கு அழகு நிலையங்கள் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்புடன் இணைந்து மேற்கொண்ட
சோதனையில், அந்த நடவடிக்கை தெரிய வந்ததாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
முறையான அனுமதியின்றி அழகு சிகிச்சைகளை மேற்கொண்டதாக, அந்த நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.