Latestமலேசியா

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பயண அனுமதி

கோலாலம்பூர், ஜூன் 21 – முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மாநில எல்லைகளை கடப்பது உட்பட நடமாட்ட கட்டுப்பாடுகளை குறைப்பது குறித்து அரசாங்கம் ஆராயும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சலுகைகள் மட்டும் சுதந்திரம் வழங்குவது குறித்து சுகாதார மற்றும் அறிவியல் நிபுணர்கள் ஆராய்வதாக தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் முடிவுகள் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறினார். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் MySejahtera செயலியில் மஞ்சள் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் சுதந்திரத்திற்கான தடுப்பூசி கடப்பிதழ் நடவடிக்கையாக அது இருக்கும் என கைரி ஜமாலுடின் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!