
யான், செப் 23 – – உலகளாவிய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் மற்றும் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குழு முழுமையான இரண்டு புத்தர் சிலைகள் மற்றும் பழங்கால எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டையும் கண்டுப் பிடித்துள்ளது. பினாங்கு புக்கிட் சோராஸ் தொல்பொருள் தளத்தில் அந்த சிலைகளும் கல்வெட்டும் கண்டுப்பிடிக்கப்பட்து. அந்த தொல் பொருள் மையத்தில் அகழ்வாராய்ச்சியை மலேசிய விவசாய பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் Dr. Nasha Rodziadi Khaw தலைமையிலான குழுவினர் கண்டுப்பிடித்தனர்.
தேசிய பாரம்பரியத் துறைக்கும் பொதுப் பல்கலைக்கழகத்துக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த பொருட்கள் அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் ஒரு முன்னோடித் திட்டம் என்று பாரம்பரிய ஆணையர் முகமட் அஸ்மி முகமட் யூசோப் தெரிவித்தார்.
தொல்பொருள் தளத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட தொடக்க தேதி
கி.பி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு ஆகும், இது பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற கோயில் தளங்களுக்கும் ஸ்ரீவிஜய காலத்தின் வளர்ச்சிக்கும் சமகாலமாகும்.
“ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 12 வரை மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆராய்ச்சி பிரதான கோவிலின் முழு அமைப்பில் பாதியை வெளிப்படுத்தியது. கடந்த செப்டம்பர் 8 வரை, இந்த அகழ்வாராய்ச்சி கோவிலின் வடக்கு மற்றும் தெற்குச் சுவர்களில் பாதியையும், முழு மேற்குச் சுவரையும் காட்டுவதன் மூலம் கோயிலின் மிகப் பெரிய மற்றும் முழுமையான அமைப்பை வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது என்று முகமட் அஸ்மி தெரிவித்தார்.