Latestமலேசியா

முழு அடைப்பின் கீழ்  கடுமையான சாலை சோதனை நடவடிக்கைகள்

கோலாலம்பூர்,  ஜூன் 1 – இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் முழு அடைப்புக்கான உத்தரவை மக்கள் முறையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் 800 சாலை சோதனை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள், தாங்கள்  அனுமதிக்கப்பட்ட 10 கிலோமீட்டர் பகுதிக்குள்ளே பயணம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த, உடன் வீட்டு நீர் அல்லது மின்சார கட்டணத்துக்கான அறிக்கைகளை  எடுத்துச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர்.

சாலை தடுப்புகளில் , தகுந்த காரணங்களைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே பயணிப்பதை உறுதிச் செய்ய, சோதனைகள்  துல்லியமாக மேற்கொள்ளப்படுமெனவும், தேசிய போலீஸ்  படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!