
சீனாவின் சில மாநிலங்களில், திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியருக்கு, முழு சம்பளத்துடன் 30 நாள் திருமண விடுப்பு வழங்கப்படுகிறது.
மோசமான சரிவை எதிர்நோக்கியுள்ள சீனாவின் பிறப்பு விகிதத்தை சரிசெய்ய, அந்நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய சலுகைகளில் அதுவும் ஒன்றாகும்.
அதன் வாயிலாக, திருமணம் செய்துக் கொள்ளவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் இளம் தம்பதியரை ஊக்குவிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1980-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு வரையில் சீனாவில் அமலில் இருந்த “ஒரு குழந்தை” கொள்கையால் அந்நாட்டின் பிறப்பு விகிதம் மோசமான சரிவை எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.