வாஷிங்டன், ஏப்ரல் 9 – வாழ்நாளில் காண்பதற்கு மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை, திங்கட்கிழமை இரவு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
அம்மூன்று நாடுகளின் வாயிலாக, அந்த முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவை கடந்து சென்றது.
முழு சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் சூழ்ந்ததாக கூறப்படுகிறது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு செல்லும்போது சூரியனை நிலவு மறைப்பதுதான் சூரிய கிரகணம்.
சூரிய கிரகணம் ஓராண்டில் இருமுறை தான் நிகழும். ஆனால், இருமுறையும் முழு சூரிய கிரகணமாக இருக்குமா என சொல்ல முடியாது.
எனவே, முழு சூரிய கிரகணம் நிகழ்வது அரிது.
அதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பை, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் மக்கள் பெற்றனர்.
நிலவு, பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்பட்டதால், அது நீண்ட நேரம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.