கோலாலம்பூர், பிப் 4 – அம்னோ மற்றும் பாஸ் உருவாக்கிய முவாபாக்காட் நேசனல் கூட்டணியில் (Muafakat Nasional ) தமது கட்சி இணையாது என பெர்சத்துவின் தலைவர் Tan Sri Muhyiddin yassin தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் Muafakat Nasional லில் இணைவதற்கு பெர்சத்து இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் பெர்சத்துவிற்கும் அம்னோவிற்குமிடையிலான தகராறு மோசமானதைத் தொடர்ந்து தங்களது உறுப்பியம் அதிகாரப்பூர்வமாக்கப்படவில்லை. எனவே Muafakat Nasional லை தாம் ஏற்கனவே மறந்துவிட்டதாகவும் அது குறித்து மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லையென முஹிடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்13 hours ago