Latestமலேசியா

முஸ்லிம் அல்லாதர் வழிபாட்டு தலங்களை சட்டப்பூர்வமாக்க உதவுவதற்கு Max Unity சிறப்புக் குழு

ஜோர்ஜ் டவுன் , ஏப் 10- இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தவும் பதிவு பெறாத வழிபாட்டு தலங்கள் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுவதில் Max Unity என்ற சிறப்புக் குழு கண்காணிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஒற்றுமை விவகாரத்திற்கு பொறுப்பு வகிக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இந்த சிறப்புக் குழுவில் இடம்பெற்றிருப்பார்கள் என தேசிய ஒற்றுமை அமைச்சர் Halimah Mohamed செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதோடு அனைத்து சமயங்களையும் சேர்ந்த சமய தலைவர்களைக் கொண்ட தனி ஐக்கிய குழு, Max unity சிறப்புக் குழுவுடனும் மற்றும் ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு துறையுடனும் இணைந்து பணியாற்றும் என அவர் கூறினார். பதிவு செய்யாமல் இருந்துவரும் முஸ்லிம் அல்லாதாரின் வழிபாட்டு தலங்களை சங்கங்களின் பதிவதிகாரியிடம் பதிவு செய்வதற்கு உதவுவதன் மூலம் அந்த வழிபாட்டு தலங்களை சட்டப்பூர்மாக ஆக்குவதற்கும் இந்த குழு உதவும் . சம்பந்தப்ட்ட மாநில அரசாங்கங்களுடன் வழிபாட்டு தலங்களுக்கு நிலம் கிடைப்பதற்கான முயற்சியிலும் அந்த குழு உதவும் என்றும் ஹலிமா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!