ஜோர்ஜ் டவுன் , பிப் 14 – முஸ்லிம் அல்லாத மூன்று பிள்ளளைகளை உடனடியாக அவர்களது தாயாரிடம் ஒப்படைக்கும்படி பெர்லீஸ் சமயத்துறைக்கு பினாங்கின் இரண்டாவது முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 14 வயதுடைய இரட்டை சகோதரிகளான சுலோசனா, சுலேசினி மற்றும் 10 வயதுடைய அவர்களது சகோதரன் தட்சினா ஆகிய மூவரை பராமரிக்கும் முழு உரிமையை அவர்களது தாயார் Loh Siew Hong கிடம் ஒப்படைக்கும்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதையும் ராமசாமி சுட்டிக்காட்டினார். அந்த பிள்ளைகளை தேடி கண்டுபிடித்து அவர்களது தாயாரிடம் ஒப்படைக்கும்படி போலீஸ் படைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்படி இருந்தும் முஸ்லிம் அல்லாத பிள்ளைகளை பெர்லீஸ் சமய அதிகாரிகள் தங்களது தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய காரணம் என்னவென்றும் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Related Articles
Check Also
Close