
கோலாலம்பூர், மார்ச் 23 – ஜோகூரில், முஸ்லிம்கள் பிற இனத்தவரின் வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்லவோ, கொண்டாட்டங்களில் பங்கு பெறவோ தடை இல்லை . அத்தகையதொரு தடையை விதிப்பதற்கு எந்த காரணமும் இல்லையெனவும் ஜோகூர் சுல்தான் Sultan Ibrahim Sultan Iskandar தெரிவித்தார்.
முஸ்லீம்கள், பிற இனத்தவரின் சமய சடங்குகள் அல்லது வழிபாடுகளில் கலந்து கொள்ளவே தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடை தொடர்பான விளக்கம் தெளிவாக உள்ளது. அதோடு, முஸ்லீம்கள், தங்களது சமயத்தின் மீது வலுவான அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதால், இவ்விவகாரத்தை தாம் இனியும் நீட்டிக்க விரும்பவில்லை என ஜொகூர் சுல்தான் கூறினார்.
ஜோகூர் இஸ்லாமிய சமய மன்றம் , கடந்த பிப்ரவரியில் அம்மாநில முஸ்லீம்கள், முஸ்லீம் அல்லாதவர்களின் சமய சடங்குகளில் கலந்து கொள்ள தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
ஆனால், சமய சடங்குகளை உட்படுத்தாத பிற இனத்தவரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜோகூர் முஸ்லீம்கள் அனுமதியளிக்கப்படுகின்றனர்.
எனினும், சிலாங்கூர் இந்த விவகாரத்தில் சற்று கடுமையான விதிமுறைகளைக் கொண்டுள்ளது. அம்மாநில முஸ்லீம்கள்
பிற இனத்தவரின் வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.