
கோலாலம்பூர், மார்ச் 28 – முஸ்லீம் அல்லாதவர்கள், திருமணத்துக்கு முந்தைய பயிற்சி திட்டத்தில் பங்கேற்பதைக் கட்டாயமாக்கும் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராய செயற்குழு ஒன்று அமைக்கப்படும். அதற்கான பரிந்துரையைத் தயார் செய்யும் நடவடிக்கையை மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு மேற்கொண்டிருப்பதாக, துணையமைச்சர் Aiman Athirah Sabu தெரிவித்தார்.
அதன் தொடர்பில் ஒரு இறுதி முடிவை எடுப்பதற்காக , உகந்த பயிற்சி திட்டமொன்றை அந்த செயற்குழு அமைச்சரவையில் முன்வைக்குமென அவர் கூறினார்.