
கோலாலம்பூர் , செப் 13 – ஜொகூரில் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர் குறித்து ஆற்றிய உரை தொடர்பாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினிடம் மற்றொரு சுற்று வாக்குமூலம் பெறப்படும் என போலீஸ் படைத் தலைவராக ஐ.ஜி.பி டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்திருக்கிறார். நாளை செப்டம்பர் 14ஆம் தேதி விசாரணை அதிகாரிகள் முஹிடினை சந்தித்து வாக்குமூலம் பதிவு செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஐ.ஜி.பி கூறினார். ஜொகூர். சிம்பாங் ஜெராமில் முஹிடின் ஆற்றிய சொற்பொழிவின்போது இனம்,சமயம் மற்றும் ஆட்சியாளர் தொடர்பான அம்சங்களைக் கொண்டிருந்ததாக கூறப்படுவது தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும்.
தேர்தல் சட்டத்தின் 4 A விதி (1) இன் கீழ் அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ரஸாருதீன் தெரிவித்தார். சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தலின்போது ஆற்றிய சொற்பொழிவின்போது அரசாங்கம் இனியும் மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில் இல்லையென முஹிடின் கூறியிருந்து தொடர்பில் அவருக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.