
ஷா ஆலாம், மார்ச் 13 – பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் எதிர்நோக்கியுள்ள மொத்தம் 7 குற்றச்சாட்டுகளும், கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்துக்கு மாற்றப்படவுள்ளது.
அந்த 7 குற்றச்சாட்டுகளையும் அந்த ஒரே நீதிமன்றத்தில் செவிமடுக்க குற்றம் சாட்டிய தரப்பும் தற்காப்பு தரப்பும் இணக்கம் தெரிவித்தன.
முன்னதாக, இன்று காலை ஷா ஆலாம் செஷன் நீதிமன்றத்தில் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் , தம் மீது சுமத்தப்பட்ட கள்ளப் பண மாற்றம் மீதான 7வது குற்றச்சாட்டினை மறுத்து விசாரணை கோரினார்.
இவ்வேளையில், ஏற்கனவே கோலாலம்பூர் நீதிமன்றம் வழங்கிய 20 லட்சம் ரிங்கிட் ஜாமின் தொகையில் முஹிடினை விடுவிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.