
கோலாலம்பூர், மார்ச் 27- Yayasan Al – Bukhary அறநிறுவனத்திற்கான வரி விலக்கை முன்னாள் நிதியமைச்சர் ரத்து செய்துவிட்டதாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியிருந்தது தொடர்பில் அவருக்கு எதிராக லிம் குவான் எங் அவதூறு வழக்கை தொடுத்துள்ளார். Guok வழக்கறிஞர் நிறுவனத்தின் சார்பில் தமது வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ள லிம் குவான் எங் பெர்சத்து கட்சியின் தலைவர் முஹிடின் யாசினை மட்டுமே பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார். இம்மாதம் 9ஆம்தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி யின் ஜாமினில் வெளியான பின்னர் முஹிடின் தமது முகநூலில் பதிவிட்ட அறிக்கையில் தமக்கு அவதூறு ஏற்படுத்தியிருப்பதாக DAP யின் தலைவருமான லிம் குவான் எங் தெரிவித்தார். அப்போதைய நிதியமைச்சருமான தாம் Yayasan AL Bukhary அறநிறுவனத்திற்கான வரி விலக்கை ரத்து செய்துவிட்டது போன்ற தோற்றத்தை அந்த அறிக்கையில் முஹிடின் ஏற்படுத்தியுள்ளார் என லிம் குவான் எங் சுட்டிக்காட்டியுள்ளார்.