
புத்ராஜெயா, மார்ச் 9 – பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் நாளை வெள்ளிக்கிழமை, கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.
MACC -மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் Tan Sri Azam Baki அதனை உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, இன்று காலை மணி 11.00 அளவில், பெர்சாத்து கட்சியின் தலைவரும், Pagoh நாடாளுமன்ற உறுப்பினருமான டான் ஶ்ரீ முஹிடின் யாசின் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்திருந்தார்.
Jana Wibawa திட்டத்தின் அரசாங்க நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பான விசாரணைக்காக , MACC முஹிடினை அழைத்திருந்ததாக நம்பப்படுகிறது.