Latestமலேசியா

கூடுதல் பொது விடுமுறைகள் தேவையில்லை ; கூறுகிறது கியூபாக்ஸ்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29 – அரசாங்க ஊழியர்கள் ஏற்கனவே பல பொது விடுமுறைகளை அனுபவித்து வருவதால், ஹரி ராயாவை முன்னிட்டு கூடுதல் பொது விடுமுறை தேவையில்லை என, கியூபாக்ஸ் (Cuepacs) கூறியுள்ளது.

இம்மாதம் பத்தாம் தேதி புதன்கிழமை மற்றும் 11-ஆம் தேதி வியாழக்கிழமை ஹரி ராயா பண்டிகை கொண்டாடப்படலாம் என்பதால், 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கூடுதல் பொது விடுமுறையை அரசாங்கம் அறிவிக்குமா? என வினவப்பட்டதற்கு, “நமக்கு உழைக்கும் மனப்பான்மை வேண்டும்” என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதில் அளித்திருந்தார்.

பிரதமரின் அந்த பதிலை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த, அரசாங்க பணியாளர்களின் தொழிற்சங்க அமைப்பான கியூபாக்ஸ், கூடுதல் பொது விடுமுறைகள், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்புடையது அல்ல என கூறியது.

இம்மாதம் 12-ஆம் தேதி விடுமுறை தேவைப்படுபவர்கள், தங்கள் வருடாந்திர விடுனுறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கியூபாக்ஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் நோர்டின் தெரிவித்தார்.

அதோடு, வீட்டில் இருந்து வேலை செய்யவும் அவர் ஊக்குவிக்கப்படுவதாக ரஹ்மான் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!