Latestமலேசியா

முஹிடின் பிரதமராக வருவதற்கு ஆதரித்த 10 எம்.பிக்கைளை மன்னித்து விட்டேன் – ஸாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், ஜன 12 – 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு பின் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக வருவதற்கு ஆதரித்த தேசிய முன்னணியின் 10 எம்.பிக்களை மன்னித்து விட்டதாகவும் ஆனால் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வரப்போவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். அதே வேளையில் கட்சியின் முடிவுக்கு எதிராக புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை தாம் மட்டுமின்றி அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழுவும் தொடர்ந்து கவனித்துவரும் என தேசிய முன்னணியின் தலைவருமான அவர் கூறினார். அந்த 10 பேரும் முஹிடினுக்கு ஆதரவு தெரிவிக்கும் எழுத்துப் பூர்வமான சத்தியபிரமான ஆவணத்தை பின்னர் மீட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Hishammuddin Hussein , Hasni Mohammad , Wee Ka Siong , Jalaludin Alias, M. Saravanan ,
Wee Jeck Seng, Isam Isa, Adnan Abu Hassan , Arthur Joseph Kurup , Abdul Rahman Mohamad ஆகிய 10 தேசிய முன்னணி எம்.பிக்கள் முஹிடின் யாசின் பிரதமராக வருவதற்கு ஆதரித்தனர். தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு தேசிய முன்னணிக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த 10 பேரின் பெயர்களை நேற்று அம்னோ பேராளர்களுக்கு விளக்கம் அளித்தபோது வெளியிட்டதாக ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அந்த சம்பவம் முடிந்துவிட்டது . அவர்களும் தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!