
கோலாலம்பூர் , மார்ச் 10- முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் மீது திங்கட்கிழமை மேலுமொரு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
Shah Alam நீதிமன்றத்தில் அந்த Bersatu தலைவரின் மீது குற்றம் சாட்டப்படுமென, அக்கட்சியின் துணைத் தலைவர் Ahmad Faizal Azumu தெரிவித்தார்.
இதனிடையே, முஹிடின் மீது கொண்டு வரப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் , அடுத்து 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின்போது, பெரிக்காத்தான் நெஷனல் மீதான ஆதரவையே அதிகரிக்கச் செய்யுமென பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் Takiyuddin Hassan குறிப்பிட்டார்.