
ஷா ஆலாம், மார்ச் 13 – 50 லட்சம் ரிங்கிட் கள்ளப் பண மாற்று நடவடிக்கை தொடர்பில், பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் மீது இன்று ஷா ஆலாம் Sesyen நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அந்த குற்றச்சாட்டினை மறுத்து முஹிடின் விசாரணை கோரினார்.
கட்சிக்கு சொந்தமான AmBank வங்கி கணக்கின் மூலமாக, Bukhary Equity நிறுவனம் செலுத்திய 50 லட்சம் ரிங்கிட்டைப் பெற்றதாக முஹிடின் குற்றச்சாட்டினை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த புதிய குற்றச்சாட்டின் மூலமாக, முஹிடின் மீது மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முஹிடின் மீது 23 கோடியே 25 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய 4 ஊழல் குற்றச்சாட்டுகளும் , 19 கோடியே 50 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய கள்ளப் பண மாற்றம் தொடர்பில் 2 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.