கோலாலம்பூர், மே 6 – முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் வாட்ஸ்அப் கணக்கு இன்று ஊடுறுவப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நண்பகல் 12 மணி முதல் தனது கைப்பேசி ஊடுறுவப்பட்டதாக பதிவு செய்துள்ளார்.
மதிய நேரத்திற்குப் பிறகு அவரது கணக்கிலிருந்து செய்திகளைப் பெறுபவர்களை பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்படுமென்றும் அவரது வாட்ஸ்அப் கணக்கு மீண்டும் செயல்படுத்த முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.