கோலாலம்பூர், பிப் 9 – இன்று காலை மேற்கொண்ட RT – PCR சோதனையின் மூலமாக, தமக்கு கோவிட் தொற்று கண்டிருப்பது தெரிய வந்ததாக, தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
தமக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், வீட்டிலேயே தாம் தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாகவும், அவர் இன்று தமது அதிகாரப்பூர்வ சமூக அகப்பத்தின் மூலமாக தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில், தம்முடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், சுகாதார அமைச்சு நிர்ணயித்திருக்கும் SOP -களைப் பின்பற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார். டான் ஶ்ரீ முஹிடின் யாசின், நேற்று தேசிய மீட்சித் திட்டத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.