Latestமலேசியா

முஹிடின் யாசினை சந்திப்பதற்கு நேரம் இல்லையா? பிரதமரை சாடியது பெர்சத்து கட்சி

கோலாலம்பூர், ஜூன் 23 – அமைச்சரவையில் சுரைடா கமாருடின் விவகாரம் தொடர்பில் முடிவு எடுப்பதற்காக பிரதமர் Ismail Sabri Yaakob விரைவில் பெர்சத்து தலைவர் Tan Sri Muhyiddin Yassin னை சந்திக்க வேண்டும் என அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் Wan Saiful Wan Jan கோரிக்கை விடுத்தார். பிரதமரை சந்திப்பதற்காக Muhyiddin இரண்டு வாரங்களுக்கும் மேலாக காத்திருக்கிறார். சுரைடாவுக்கு பதிலாக அமைச்சரவையில் பெர்சத்து கட்சியின் பிரதிநிதியின் பெயரை பிரதமரிடம் சமர்ப்பிப்பதற்காக Muhyiddin காத்திருப்பதை Wan Saiful சுட்டிக்காட்டினார். காற்பந்து விளையாட்டை பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவரை சந்திப்பதற்கு நேரம் இல்லையா என Wan Saiful வினவினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!