புத்ராஜெயா, ஆக்ஸ்ட் 28 – தேச நிந்தனை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் அரசாங்கப் பிரதிநிதிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் அல்ல.
மாறாக அவை அனைத்தும் அரண்மனை பிரதிநிதிகளிடமிருந்து செய்யப்பட்டவை என்று அரசாங்கச் செய்தி தொடர்பாளர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மீதான தேச நிந்தனை பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணையில் அரசு தலையிடவில்லை என்பதை ஃபஹ்மி உறுதிப்படுத்தினார்.
இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் ஃபஹ்மி கூறினார்.
முஹிடின் மீதான வழக்கு விசாரணையை அரச மலேசியக் காவல்துறை முழுமையாக மேற்கொள்கிறது என்று ஃபஹ்மி தெரிவித்தார்.