Latestமலேசியா

முஹிடின் யாசின் மீதான விசாரணை செப்டம்பர் 12க்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், செப் 7 – டான் ஶ்ரீ முஹிடின் யாசின் மீதான விசாரணை பதிவு அடுத்த வாரம் செப்டம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெரிக்காதான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான முஹிடினின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் போலிஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் தெரிவித்துள்ளார்.

அவசரமான ஒரு வேலை காரணமாக தாம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக முஹிடின் தெரிவித்ததாக ரசாருடின் கூறினார்.

முன்னதாக முஹிடினின் வாக்குமூலம் திங்கட்கிழமை செப்டம்பர் 11ஆம் திகதி நடப்பதாக இருந்தது.

பூலாய் சட்டமன்றத்தின் இடைத்தேர்தலில் பக்காதான் ஹராப்பானுக்கு வாக்களிப்பது பாவம் என முஹிடின் கூறியிருந்த கூற்றுக்கு எதிராக 2 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!