சியோல், பிப் 6 – மூக்கை மட்டும் மூடக் கூடிய முகக் கவசத்தை தயாரித்திருக்கிறது தென்கொரிய நிறுவனம் ஒன்று.
Atman எனப்படும் அந்த நிறுவனம் தயாரித்திருக்கும் முகக் கவசம் இரு பாகங்களைக் கொண்டுள்ளது. உணவருந்துபோது அந்த முகக் கவசத்தின் வாயை மூடும் பகுதியை கழற்றிக் கொள்ள முடியும். அதே நேரம் மூக்கின் பகுதி தொடர்ந்து முகக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும்.
அதே வேளை மூக்கை மட்டும் மூடக் கூடிய தனிப்பட்ட முகக்கவசத்தையும் அந்த நிறுவனம் விற்பனை செய்கின்றது. மூக்கை மட்டும் மறைக்கும் முகக் கவசத்தை வழக்கமாக அணியும் முகக் கவசத்தின் கீழ் அணிந்துக் கொள்ளலாம். உணவருந்தும் போது மேல் இருக்கும் முகக் கவசத்தை கழற்றிக் கொண்டால் போதுமானது.
மூக்கை மட்டும் மூடக் கூடிய முகக் கவசம் கேட்பதற்கு சற்று விநோதமாக இருக்கலாம். ஆனால் மூக்கின் பகுதியாகவே கோவிட் வைரஸ் விரைந்து ஒருவரைத் தாக்குவதாக ஆய்வுகள் வழி தெரிய வந்திருப்பதை அடுத்து, மூக்கை மட்டும் மூடக் கூடிய முகக் கவசத்தின் பயன்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் தடுக்க வில்லை.