கோலாலம்பூர், பிப் 8 – பணம் சேர்த்து வைத்து திருமணத்தை முடிக்க பலர் பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள். அதில் இந்த மலாய்க்கார இளைஞர் எடுத்த முயற்சியோ பலரது கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இந்த இளைஞர் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதற்காக ,மூன்றாண்டுகளாக, 5, 10 , 20 ரிங்கிட் நோட்டுகளை மூங்கிலுக்குள் சேமித்து வைத்துள்ளார்.
மூங்கிலை வெட்டியே பணத்தை எடுக்க முடியுமென்பதால், அதனை பணம் சேர்க்கும் உண்டியலாக பயன்படுத்தியதாக கூறியுள்ளார் Farhan Sam எனும் அந்த இளைஞர்.
தாம் பணம் சேர்த்து வந்ததையும் தனது காதலியிடம் மறைத்து வைத்து அவருக்கு இன்ப அதிர்ச்சியையும் தந்திருக்கிறார் Farhan Sam .
அந்த இளைஞர் தற்போது திருமணம் புரிந்து கொண்டிருக்கும் நிலையில் , அவரது திருமண சேமிப்பு குறித்த காணொளியை 14 லட்சம் பேர் இதுவரைப் பார்த்து வியப்படைந்துள்ளனர்.