
கோலாலம்பூர், ஜன 21 – மலேசிய தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான எழுத்தாளர் நா.ஆ . செங்குட்டுவன் காலமானார். 80 வயதுடைய அவர் சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக உடல் நலமின்றி இருந்து வந்தார். இன்று அதிகாலையில் செங்குட்டுவன் மரணம் அடைந்தததாக அவரது மகன் கமலக் கண்ணன் தெரிவித்தார். துன் சம்பந்தன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த அவர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை , கட்டுரை , கவிதை , நாடகம் போன்ற பன்முகத்துறையில் படைப்பிலக்கியங்களை படைத்த பண்பட்ட எழுத்தாளராக விளங்கி வந்தார்.
மலேசிய தமிழ் இலக்கிய உலகில் அதிகமான நூல்களை எழுதியவர் என்ற பெருமையும் செங்குட்டுவனுக்கு உண்டு . நாவல்கள் , சிறுகதைகள், நாடகங்கள் , கவிதைகள் உட்பட 54 புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். இவற்றில் பெரும்பாலும் நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுதிகளாகும். மலேசியா மட்டுமின்றி தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு இலக்கியப் போட்டிகளிலும் அவர் பரிசுகளை பெற்றுள்ளார். எதற்கும் சமரசம் செய்துகொள்ளாதவர் மட்டும் அல்ல.மனதில் பட்டதை துணிச்சலோடு கூறும் எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அவரது இறுதிச் சடங்கு நாளை நண்பகல் 12 மணி முதல் 2.30 க்குள் எண் 20, ஜாலான் செத்தியா டூத்தா, யு 13./23 z செத்தியா எக்கோ பார்க் என்ற முகவரியிலுள்ள இல்லத்தில் நடைபெறும்.
தொடர்பு எண் 0123323682 ( சுந்தர்)