
கோலாலம்பூர், ஏப் 4 – நாட்டிலுள்ள மூத்த குடிமக்களில் இன்னமும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் Booster எனப்படும் ஊக்க ஊசியை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதாக சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார். தற்போது கோவிட் நோயாளிகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பூஸ்டர் ஊசி போடாமல் இருக்கும் மூத்த குடிமக்கள் என அவர் கூறினார்.
Endemic கட்டத்திற்கு நாடு இப்போது நுழைந்திருப்பதால் இன்னும் பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் தங்களது குடும்பத்தின் மூத்த குடிமக்களை விரைந்து அந்த ஊசியை செலுத்திக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி Khairy Jamaluddin கேட்டுக்கொண்டார்.