கோலாலம்பூர், பிப் 17 – இவ்வாண்டு பிப்ரவரி மாதம்வரை நாட்டில் மொத்தம் 336,848 பேர் அல்லது மூத்த குடிமக்களில் 11. 5 விழுக்காட்டினர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.
நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த 32,034 பேரில் 61. 3 விழுக்காட்டினர் அல்லது 16, 646 பேர் மூத்த குடிமக்கள் என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah தெரிவித்தார்.
மூத்த குடிமக்களில் 22 லட்சத்து 58,21 பேர் பூஸ்டர் ஊசியை செலுத்திக் கொண்டுள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் 96 விழுக்காட்டினர் அல்லது
33 லட்சத்து 35,309 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக டாக்டர் Noor Hisham Abdullah டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.