Latestமலேசியா

மூன்றாம் பாலின தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு பிரமாண்ட பெயர் சூட்டு விழா

கோலாலம்பூர், மார்ச் 10 – இந்தியாவில் குழந்தையைப் பெற்றெடுத்த, முதல் மூன்றாம் பாலினத்தவர் என்ற பெருமையை பெற்றவர்களான, Ziya Paval, Zahhad தம்பதியர், புதிதாக தாங்கள் வரவேற்ற குழந்தைக்கு, பிரமாண்டமான முறையில் பெயர் சூட்டு விழாவினை நடத்தினர்.

மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று அந்த கேரள தம்பதியர் நடத்திய குழந்தையின் பெயர் சூட்டு விழாவில், அத்தம்பதியரின் குடும்பத்தினர், நண்பர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் பிறந்த தங்களின் குழந்தைக்கு அத்தம்பதியர் Zabiya என பெயரிட்டுள்ளனர்.
அரபிக் மொழியில் Zabiya என்றால் விண்மீன் என பொருள்படும். அத்துடன் அந்த பெயரின் வாயிலாக அந்த திருநங்கை தம்பதியருக்கு பிறந்திருப்பது பெண் குழந்தை என்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே, தங்களது குழந்தையின் பிறப்புப் பத்திரத்தில் , பெற்றோராக தங்களது மூன்றாம் பாலினத்தை பதிவு செய்யக் கோரி, அந்த தம்பதியர் மருத்துவமனை அதிகாரத்துவ தரப்பை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!