
செத்தியு , நவ 21 – மூன்று ஆடுகளை விழுங்கிய 100 கிலோ மலைப்பாம்பு ஒன்றை பிடிப்பதில் மலேசிய பொது தற்காப்புத்துறை உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர், செத்தியு, கம்போங் குபாங் புயு சலோக்கில் உள்ள ஆடுகள் அடைத்துவைக்கும் கொட்டகையில் இன்று காலை மணி 9.15அளவில் ஆறு மீட்டர் நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டதாக செத்தியு மாவட்ட பொது தற்காப்பு படையின் அதிகாரி கேப்டன் முகமட் நிசு ஹுசைன் தெரிவித்தார். ஆடுகள் வளர்க்கும் குடியானவர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த மலைப்பாம்பு பிடிப்பதற்காக நான்கு உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் கூறினார்.