கோலாலம்பூர், பிப் 14 – தனித்து வாழும் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளையும் அவர்களது தாயாரிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதிப்படுத்தும்படி போலீஸ் படைத் தலைவரை Bukit Glugor நாடாளுமன்ற உறுப்பினர் RamKarpal Sing கேட்டுக் கொண்டார். தமது மூன்று பிள்ளைகளும் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தமது கணவரிடமிருந்து மணவிலக்கு பெற்ற Loh siew Hong போலீசில் புகார் செய்துள்ளார். தற்போது தமது பிள்ளைகள் பெர்லீஸ் சமய அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வருவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவுக்கு ஏற்ப அந்த பிள்ளைகள் அவரது தாயாரிட Loh Siew Hong கிடம் ஒன்று சேர்வதற்கு ஐ.ஜி.பி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என DAP யின் சட்ட ஆலோசகருமான ராம் கர்ப்பால் சிங் வலியுறுத்தினார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago