Latestமலேசியா

மூன்று மாணவர்களிடம் ஓரின புணர்ச்சி; உஸ்தாஸ் கைது

மாச்சாங், ஏப் 26 – இரண்டு  ஆண்டுகளுக்கு முன்  தனது மாணவர்களில் மூவரை ஓரின புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக கூறப்படுவது தொடர்பில்   சமயப் பள்ளியின்  ஆசிரியரான   Ustaz  ஒருவர் கைது செய்யப்பட்டார்.  ஏப்ரல்  15ஆம் தேதி   போலீசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து  39 வயதுடைய அந்த   சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக   Machang   மாவட்ட போலீஸ் அதிகாரி   Superintendent Ahmad Shafiki Hussin தெரிவித்தார்.  ஓரினப் புணர்ச்சியினால்  பாதிக்கப்பட்ட   12 மற்றும்  13 வயதுடைய  மாணவர்கள்  நள்ளிரவில் மாவட்ட போலீஸ் நிலையத்தில்  புகார்  செய்ததாக   அவர் கூறினார்.  

2022 ஆம் ஆண்டு  அந்த சமயப்பள்ளியில்   தனித்தனியாக   ஓரின புணர்ச்சிக்கு அந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக  இன்று வெளியிட்ட  அறிக்கையில்  

Ahmad Shafiki Hussin தெரிவித்தார்.  

போலீஸ் விசாரணைக்கு உதவும் பொருட்டு   அந்த சந்தேகப் பேர்வழி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.     குற்றம் நிருபிக்கப்பட்டால்  20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் பிரம்படி  வழங்கும் குற்றவியல் சட்டத்தின்  377 C விதியின் கீழ்   அந்த  Ustaz  சிற்கு  எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!