
கோலாலம்பூர், நவம்பர் 20 – சாலையில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பயணிக்கும் ஆற்றல் கொண்ட, மைக்ரோமொபிலிட்டி எனும் சிறு ரக வாகனங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடரும்.
பெடல்கள் இருக்கும் போதும் இயந்திரத்தை பயன்படுத்தும் சைக்கிள்கள் பயன்பாட்டில் இருப்பதை, தமதமைச்சு அறியுமென போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார்.
அதனால், அது போன்ற சிறு ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்து அமலில் இருப்பதை, ஹபிபொல்லா மக்களவையில் சுட்டிக் காட்டினார்.
மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபெட் மின்சார சைக்கிள்கள் மற்றும் PMD ஆகிய மூன்று சிறு ரக வாகனங்கள், சாலையில் பயணிக்க கடந்தாண்டு போக்குவரத்து அமைச்சு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.