
ஜொகூர், தம்போயிலுள்ள, வீடொன்றில், தமது சொந்த மகளை கற்பழித்த இந்திய நாட்டு ஆடவனுக்கு எதிராக, ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. எனினும், தமக்கு எதிரான குற்றங்களை மறுத்து அந்த 45 வயது ஆடவன் விசாரணை கோரினான்.
ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையான அவ்வாடவன், மூன்று வயது 11 மாதங்களே ஆன தனது கடைசி மகளை கற்பழித்தாக முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகளுக்கு மேல்போகாத சிறைத் தண்டனையும், பத்து பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அதே சமயம், இயற்கைக்கு புறப்பாக பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டையும் அவன் எதிர்நோக்கியுள்ளான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
கடந்த மாதம் 13-ஆம் தேதி, மலேசிய பெண்ணான அவ்வாடவனின் மனைவி சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டின் குளியல் அறையில் அவன் அக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, அவ்வாடவனின் மனைவியிடமிருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து, கடந்த மாதம் 28-ஆம் தேதி அவன் கைதானான்.