Latestஉலகம்

மூன்று விரல்களை கொண்ட ‘மம்மி’; மனிதர் அல்ல ஆராய்ச்சியாளர்கள் உறுதி

மெக்சிகோ சிட்டி, நவம்பர் 9 – அண்மையில் பொதுவில் காட்சிக்கு வைக்கப்பட்ட, மூன்று விரல்களை கொண்ட “மம்மிகள்” சில, மனிதர்கள் அல்ல என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு முன், பூமியை சார்ந்தது இல்லை என கூறப்பட்ட அந்த “மம்மிகள்” உண்மையானவை, ஒரு காலத்தில் வாழ்ந்தவை என அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த மம்மிகளுக்கு நுரையீரலும், விலா எலும்புகளும் இல்லை. அதனால், அவை “மனிதர் அல்லாத புதிய உயிரினம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த நான்காண்டுகளில் அது போன்ற ஐந்து மாதிரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அவற்றின் உடல் மற்றும் உயிரியல் உருவாக்கத்தில் மனித தலையீடு எதுவும் இல்லை.

அதனால், அந்த மம்மிகள் உண்மையானவை என்பதை குறிக்கும் பிரகடனக் கடிதத்தில், 11 ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டுள்ளனர். எனினும், அவை விண்வெளியில் இருந்து வந்தவையா என்பதை உறுதிப்படுத்த அவர்கள் மறுத்துவிட்டனர்.

முன்னதாக, UFO – பறக்கும் தட்டு ஆர்வலரான மெக்சிகோ பத்திரிக்கையாளர் ஒருவர், மூன்று விரல்களையும், நீளமான மண்டை ஓட்டையும் கொண்ட “மம்மிகளை” கடந்த செப்டம்பரில் பொதுவில் காட்சிக்கு கொண்டு வந்தார்.

பெருவிலுள்ள, சுரங்கம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த “மம்மி” மனிதருடையது அல்ல என அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!