
புத்ராஜெயா, ஜன 10 – மலேசிய முதலாளிகள், இனி 15 நாடுகளில் இருந்து அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை தருவிக்க முடியும்.
அத்துடன், அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் திட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் தளர்வின் கீழ், முதலாளிகளின் விண்ணப்பம் மூன்றே நாட்களில் பரிசீலிக்கப்படுமெனவும் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
தற்போது நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிப்பதை அடுத்து, அத்திட்டத்தில் தளர்வுகளை ஏற்படுத்த இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் கூறினார்.