Latestமலேசியா

டெஸ்லா கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; செர்டாங்கில், இருள் சூழ்ந்த சாலையை பார்க்க முடியவில்லை என ஓட்டுனர் குற்றச்சாட்டு

செர்டாங், பிப்ரவரி 5 – டெஸ்லா ஆடம்பரக் கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானது.

அவ்விபத்து, சிலாங்கூர், செர்டாங்கில், நிகழ்ந்தது என நம்பப்படுகிறது.

சாலையோரத்தில் இருக்கும் சுவரில் துளை விழுந்திருப்பதை காட்டும் புகைப்படங்களையும், காணொளியையும் நபர் ஒருவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட டெஸ்லா கார் ஓட்டுனர், கோலாலம்பூரிலுள்ள, உணகவம் ஒன்றின் வாடிக்கையாளர் என, நேற்று அதிகாலை பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த பதிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகத்திலிருந்து வெளியேறிய ஓட்டுனர் சம்பந்தப்பட்ட சுவரை மோதி விபத்துக்குள்ளானதாகவும், சாலையில், இருள் சூழ்திருந்ததால் அவ்விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த தடுப்புச் சுவர் அங்கு இருப்பதாகவும், இணைய வரைப்படத்திலும் அது இடம் பெற்றுள்ளதாகவும், அதனால் ஓட்டுனர் இருளில் அந்த சுவர் கண்ணுக்கு தெரியவில்லை என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அந்நபர் கூறியுள்ளார்.

அந்த பதிவு வைரலாகி கலவையான கருத்துகளை பெற்று வருகிறது.

“டெஸ்லா விபத்துக்குள்ளானது, ஆனால் பெயர் கிடைத்திருப்பதோ உணவகத்திற்கு” என இணையப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;

“சம்பந்தப்பட்ட நபர் தவறுதலாக வேஸை பயன்படுத்தி இருக்கக்கூடும்” என மற்றொரு நபர் கூறியுள்ளார்.

எனினும், அவ்விபத்துக்கான உண்மை காரணம் இன்னும் தெரியவில்லை என்பதோடு, அது தொடர்பில் போலீசாரும் இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!