
கலிபோர்னியா , ஜன 24- அமெரிக்கா கலிபோர்னியாவில் 3 தினங்கள் இடைவெளியில் நிகழ்ந்த இரண்டாவது துப்பாக்கிச் சூட்டில் , எழுவர் கொல்லப்பட்டனர்.
இந்த அண்மைய துப்பாக்கிச் சூடு, இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வேளை, தாக்குதலை நடத்தியவன் 67 வயது Zhao Chunli என அடையாளம் காணப்பட்டது.
சுட்டுக் கொல்லப்பட்ட முதல் நான்கு பேர் , காளான் வளர்ப்பு தோட்டத்திலும், மேலும் மூவர் அருகிலுள்ள லாரி வர்த்தகப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட ஆடவன் தானாகவே போலீஸ் நிலையத்தில் சரணடைந்த வேளை, தாக்குதலுக்கான நோக்கம் குறித்த எந்த தகவலையும் உள்நாட்டுப் போலீசார் வெளியிடவில்லை.