‘மூன் கேக்’ மோசடி; ஆகஸ்டில் மட்டும் 27 சிங்கப்பூரியர்கள் மொத்தம் RM1.11 மில்லியனை இழந்தனர்

சிங்கப்பூர்; செப் 6 – பலவகையான மோசடிகளுக்க்கு இடையில், இப்போது ‘மூன் கேக்’ விற்பனை மோசடியும் தலைத்தூக்க ஆரம்பித்து விட்டது.
ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 27 சிங்கப்பூரியர்கள் மொத்தம் 325,000 சிங்கப்பூர் டாலர் அதாவது 1.11 ம்மில்லியன் ரிங்கிட்டை இந்த மோசடியில் இழந்துள்ளதாக போலிஸ் தரப்பு கூறியுள்ளது.
முகநூல் மற்றும் இன்ஸ்தாகிர்ராமில் வரும் விளம்பரத்தை பார்த்து ஆர்டரை கொடுத்தப் பின்னர், பணம் செலுத்த ஒரு வாட்சாப்பில் லிங்க் ஒன்று வழங்கப்படுகிறது. அந்த லிங்க், நமது தொலைப்பேசியில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்கிறது. அந்த செயலி மூலம் நமது தொலைப்பேசியில் மூன்றாம் தரப்பு நபர் ஒருவர் ஊடுருவி, நமது வங்கி விவரங்களை திருடிச் செல்ல வகை செய்கிறது என, இந்த மோசடிக் கும்பல் எப்படி இயங்குகிறது என்பதனை போலிஸ் விளக்கமளித்துள்ளது.
தங்களது வங்கியில் தாங்கள் மேற்கொள்ளாத பண பட்டுவாடா நடவடிக்கைகள் இருப்பதை பார்த்த பின்னரே, ஒருவரால் இந்த மோசடி குறித்து அறிய முடிகிறது.
எனவே பொதுமக்கள், தேவை இல்லாத செயலிகளை, குறிப்பாக தெரியா தரப்புகளிடமிருந்து வரும் லிங்க்கை தட்டி எதனையும் பதிவிறக்கம் செய்வதை தவிர்த்துக் கொள்ளும்படி போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.