
ஷங்காய், மார்ச் 19 – சீனா, ஷங்காயில் ( Shanghai), இன்னும் பிறக்காத இரட்டை குழந்தைகளில் ஒன்று, 1 வயது சிறுமியின் மூளையில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
‘கருவிற்குள் கரு உருவாகும்’ மிக அரிதான சம்பவங்களில் அபூர்வமாக இப்படியொரு நிகழ்வு நடந்திருக்கிறது.
நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதோடு,தலை பெரியதாகி கஷ்டப்பட்ட சம்பந்தப்பட்ட 1 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது, இந்த அதிர்ச்சி மருத்துவர்களுக்கு காத்திருந்தது.
மூளையில் இருந்த கரு, ரத்த விநியோகம் இருந்ததால் உயிரோடு இருந்ததாகவும், எனினும், அந்த கரு வளர்ச்சி பெறவில்லை . அதையடுத்து வளச்சி பெறாத அந்த கருவை மருத்துவர்கள் அகற்றினர்.
கர்ப்பம் தரிக்கும் தொடக்க காலத்தில், பெண் முட்டையில் ஆண் விந்தணுவின் கருத்தரிப்பால் செல்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் செல்கள் சரியாகப் பிரியத்தவறும் போது இந்தகைய குறைபாடு ஏற்படுகிறது.
மிக அரிதாக ஏற்படும் இந்த நிகழ்வினை, மருத்துவர்கள் ‘ஒட்டுண்ணி இரட்டையர்’ எனவும் குறிப்பிடுவர்.