
கோலாலம்பூர், டிச 29 – மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் Naegleria Fowleri தொற்று நோய் இதுவரை மலேசியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை . எனினும் வெளிப்புற நடவடிக்கையில் குறிப்பாக , ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் நடவடிக்கையில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி மலேசியர்களை சுகாதார அமைச்சு அறிவுறுத்தி இருக்கின்றது.
அண்மையில், அமீபா தொற்றினால் உயிரிழந்த தென்கொரியர் , தனது நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பு நான்கு மாதங்கள் தென்கிழக்காசியாவின் ஒரு நாட்டில் தங்கியிருந்ததாக தென் கொரியா தெரிவித்திருந்தது .
அதையடுத்து, மலேசியர்களுக்கு அந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் Dr. Noor Hisham Abdullah தெரிவித்தார். தலைவலி, காய்ச்சல், மயக்கம் அல்லது வாந்தி போன்றவை அந்த தொற்று நோயின் தொடக்க அறிகுறிகள் என அவர் குறிப்பிட்டார்.