Latestமலேசியா

மூவர் கொலை; முன்னாள் துணை சூப்பிரடண்ட் செல்வகுமாரும் 4 சகோதரர்களும் விடுதலை

சிரம்பான், ஆக 6 – மூவரை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் போலீஸ் துணை சூப்ரிடண்ட் 45 வயதுடைய செல்வகுமார், அவரது சகோதரர்களான 43 வயதுடைய N.ராஜேஸ்கண்ணன், 42 வயதுடைய சுரேஷ்கண்ணா, 35 வயதுடைய தனபாலன், 56 வயதுடைய வீரமுத்து ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். அந்த சகோதரர்கள் உலோக மறுசுழற்சி வினியோகிப்பாளர்களாகவும் வீரமுத்து லோரி ஓட்டுனராகவும் இருந்துள்ளார். எதிர்வாதத்திற்கு அழைக்கப்படாமலேயே அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

K. Thinesh, M. Thaneswaran மற்றும் P. கார்த்திசேன் ஆகியோரை கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாலான் சிரம்பான் -மந்தின் சாலையிலுள்ள செம்பனை தோட்டத்தில் கொலை செய்தாக செல்வகுமார் மற்றும் அவரது சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களது குடும்ப உறுப்பினர்கள் காணவில்லையென 2015-ஆம் ஆண்டு போலீசில் புகார் செய்தனர். மூன்று ஆண்டுகளுக்குப்பின் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிருப்பிக்கத் தவறிவிட்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அப்துல்லா தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!