
மெக்சிக்கோ சிட்டி, ஜூன் 23 -மெக்சிக்கோவில் தேவாலயத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிக்சூட்டு சம்பவத்தில் 2 பாதிரியர்களுடன் அடைக்கலம் கோரிய மற்றொரு நபரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போப்பாண்டவர் Francis தமது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தார். திங்கட்கிழமையன்று 79 வயதுடைய பாதிரியார் Javier Campos , 81 வயதுடைய பாதிரியர் Joaquira Mora வும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தேவாலயத்திற்குள் புகுந்த ஆடவர் ஒருவருக்கு அடைக்கலம் வழங்கியது தொர்பில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த ஆடவர் சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து வந்தவர் என அடையாளம் கூறப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மெக்சிக்கோவில் சுமார் 30 பாதிரியார்கள் கொல்லப்பட்டனர்.