சலாமன்கா, ஜூன் 8 – மத்திய மெக்சிக்கோவிலுள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய ஆடவன் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மாணர்களைக் கொண்ட ஒரு குழுவை நோக்கி அந்த துப்பாக்கிக்காரன் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். அச்சம்பவத்தில் 16 மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று மாணவர்களும், இரண்டு மாணவிகளும் மற்றும் அவ்விடத்தில் இருந்த 65 வயது பெண்மணி ஒருவரும் கொல்லப்பட்டனர். மெக்சிக்கோவின் மற்றொரு நகரில் குண்டர் கும்பல்களுக்கிடையே இரண்டு மதுபான விடுதியில் நிகழ்ந்த மோதலில் எட்டு பெண்களும், மூன்று ஆடவர்களும் கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பின் இடைநிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Related Articles
Check Also
Close