
மெச்சிக்கோ சிட்டி , ஜன 3 – மெக்சிக்கோ சிறையில் ஆயுதக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 19 பேர் மாண்டனர். இவர்களில் 10 காவலர்களும் 7 கைதிகளும், தாக்குதல் நடத்தியவர்களில் இருவரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. . மெக்சிக்கோவின் Cludad Juarez நகரில் மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலில் 14 கைதிகளும் ஒரு பாதுகாவரும் காயம் அடைந்தனர். அதோடு தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டதாக மெக்சிக்கோ தற்காப்பு அமைச்சர் Cresencio Sandoval தெரிவித்திருக்கிறார்.