
கோலாலம்பூர், ஜன 7- தமது இணையத் தொடர்பு மிக மோசமாக இருப்பதாக பொதுமக்களில் ஒருவர்
தொடர்பு இலக்கவியல் அமைச்சர் பாமி பட்சிலை டிவிட்டரில் tag செய்ததை தொடர்ந்து , உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைந்து அவரது பிரச்சனை கவனிக்கப்படுமென கூறியிருப்பது, சமூக வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. Tajuddin Kamil என்பவர் , தனது 4G இணையத் தொடர்பு மிக மெதுவாக இருக்கும் நிலையில், 5G எந்த மூலைக்கு என பதிவிட்டு அமைச்சர் பாமி பட்சில் , பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகியோரை தமது டிவிட்டரில் tag செய்திருந்தார்.
அந்த பதிவை பகிர்ந்து கொண்ட பாமி பட்சில் அந்த பயனீட்டாளரின் பிரச்சனையை உடனடியாக கவனிக்கும்படி MCMC -மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்தை உத்தரவிட்டார்.
அந்த பதிவை அடுத்து, MCMC , புகாரளித்தவரின் விவகாரத்தை உடனடியாக கவனிக்கப்போவதாகவும், நாட்டிலுள்ள Unifi, Celcom போன்ற தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், மெதுவான இணையச் சேவைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு, அந்த பிரச்சனையை சரிசெயய் தங்களது நிறுவனத்தை தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டன. இந்த பதிலைப் பார்த்த இதர சமூக வலைத்தளவாசிகள், அமைச்சர் உத்தரவிட்டதாலே இந்தளவுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட தரப்புகளும் வேகமாக வேலை செய்கின்றன என கிண்டலாக பதிவிட்டிருந்தனர்.