தெமர்லோ, பிப் 11 – நேற்று முன்தினம், பகாங்,மெந்தகாப்பில் ( Mentakab ) உள்ள உணவுக் கடையொன்றில் சண்டையிட்ட நபரை போலீஸ் தேடி வருவதாக, தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் அசார் மொஹமட் யூசோஃப் (Azhar Mohd Yusof ) தெரிவித்தார்.
அந்த சண்டை தொடர்பான குறுகிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆடவர் ஒருவர், உணவகத்தில் வேலை செய்யும் பெண்ணை கீழே தள்ளி விடுவதையும், மற்றொரு ஆடவரைப் பிளாஸ்டிக் நாற்காலியால் அடிப்பதையும் காண முடிந்துள்ளது.
இவ்வேளையில், தான் கேட்ட உணவு தாமதமாக வந்ததற்காக, சம்பந்தப்பட்ட ஆடவர் மூர்க்கத்தனமாக நடந்துக் கொண்டதாக சம்பவ இடத்தில் இருந்த நபர் ஒருவர் கூறியுள்ளார்.