கோலாலம்பூர், மே 8 – தங்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு காற்பந்து விளையாட்டாளர்கள் சொந்தமாக மெய்க்காவலர்களை நியமித்துக் கொள்ளும்படி FAM எனப்படும் மலேசிய காற்பந்து சங்கம் பரிந்துரை செய்துள்ளது. அனைத்து காற்பந்து விளையாட்டாளர்களும் மெய்க்காவலர்களை வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் நிதிவளம் இல்லையென்பதால் இந்த ஆலோசனை பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் கவனத்தை ஈர்க்கக்கூடிய நட்சத்திர விளையாட்டாளர்கள் தங்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைவர் Hamidin Mohd Amin வலியுறுத்தினார். Johor Darul Ta’zim குழுவின் ஆட்டக்காரர் Safiq Rahim மின் கார் கண்ணாடி அடையளாளம் தெரியாத இரண்டு நபர்களால் நேற்றிரவு தாக்கப்பட்டதை தொடர்ந்து தனது குழுவின் விளையாட்டாளர்களுக்கான பாதுகாப்பை Johor Darul Ta’zim குழு தீவிரப்படுத்தியுள்ளது.
அண்மைய காலமாக காந்பந்து விளையாட்டாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட மூன்றாவது ஆட்டக்காரராக Safiq Rahim விளங்கி வருகிறார். இதனிடையே தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் காற்பந்து விளையாட்டாளர்கள் விழிப்பதாக இருப்பதோடு சமூக வலைத்தளங்களில் எதை பதிவிடுகிறோம் என்பதிலும் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என JDT காற்பந்து கிளப்பை நிர்வகித்துவவரும் Johore பட்டத்து இளவரசர் கேட்டுக்கொண்டார்.