
இந்தோனேசியா, சுமத்ரா பாராட்டிலுள்ள, மெராபி எரிமலை அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 164 மலையேறிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்தோனேசியாவின் தேசிய தேடி மீட்கும் நிறுவனமான BASARMAS, சம்பந்தப்பட்ட இதர அமைப்புகள், உள்ளூர் மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மலையேறிகளை தேடி மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக, இம்மாதம் ஏழாம் தேதி, அதிகாலை மணி 6.11 தொடங்கி, மெராப்பி எரிமலை சாம்பலை கக்கத் தொடங்கியதோடு, எட்டாம் தேதி மாலை வரை 22 முறை வெடிப்புகள் உணரப்பட்டதால், சுற்று வட்டாரப் பகுதியில் இரண்டாம் கட்ட எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
அதனால், நிலைமை சீரடையும் வரையில் அங்கு மலையேறும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.